பதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்?

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது…

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP