தமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது.

ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெறிந்திருக்கவில்லை, பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம் தான் தமிழர்களது மதம் என்று நம்புகிறார்கள், இது உண்மையா?

உண்மையில் இந்து மதம்(வைதீகம்) என்பது தமிழர் மதம் கிடையாது இது ஆரிய-பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழர்களிம் இடைகாலத்தில் திணிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

இம்மதம் தோன்றி சில நூற்றாண்டுகள் தான் ஆகிறது.

சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சிவவழிபாடு ஏறத்தாழ கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் மதமாக உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்பு சங்கம் மருவிய காலம் கி.மு 100 – கி.பி 600 நூற்றாண்டலவில் ஆசிவகம், சமணம், பெளத்தம் ஆகியவை தமிழகதில் செழிப்புடன் இருந்ததாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது. இவைகளும் வடநாட்டில் இருந்து வந்தவையே. இம்மதங்கள் தோன்ற மூலவேராக இருந்த மெய்யியல் கருத்துக்களில் பெரும்பாலும் தமிழ்ர்களின் மெய்யியல்  சிந்தனையே ஆகும்.

இருப்பினும் இம் மதங்கள் வலியுறுத்தும் கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் தமிழர்களிடம் தினிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்கள் ஏதாவது ஒரு வகையில் புலால் உண்ணுபவர்களே, தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்கும் (அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) ஏற்றவாறு மாமிசம் சாப்பிடும் பலி கொடுத்தும் வந்துள்ளனர் என்பதும் இலக்கிய நூல்களில் உள்ளது, இவை பாவத்திற்குறிய செயல்களாக கருதப்படவில்லை.

தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான தொல்காப்பியத்தில் நடுக்கல் வழிபாடு மற்றும் திணை நிலம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் தோறாயமாக ஐந்தாயிரம் ஆண்டு பழமைமிக்கது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நடுக்கல் வழிபாடு என்பது முன்னோர்களின் (வீரமரணம் அல்லது முன்னோர்களில் சிறந்தவர்கள்) நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது, இவையே பின்நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியது.

மேலும் தொல்காப்பித்தில்

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல்.பொருள்.5)

என்று அக்கால தாழர்கள் மதசார்பற்று இயற்க்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்று கூறுகிறது. இதைதவிர மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

இதுவே பின்நாட்களில் ஆரிய புராண இதிகாசக்களில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் போன்ற இயற்க்கை தமிழ் தெய்வங்களை முருகன், கொற்றவை, இந்திரன், வருணன், விட்டுணு, கண்ணன், இலக்குமி என்று மாற்றப்பட்டுள்ளது சங்ககால தமிழ் மக்கள் வாழ்வுக்கும் இவற்றிற்க்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

இதுமட்டுமின்றி தொல்காப்பியத்தில் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்களும் உள்ளது,

இவ்வாறு மெய்யியலை உணர்ந்து, இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் மெய்யியல் தேடலில் உருவானதே பல கண்டுபிடிப்புகள் ( மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும் பல ) ஆனால் இன்று மதம் எனும் வலையில் சிக்கி மெய்யியலை மறந்து சாதிகளாக பிரிந்துகிடக்கிறோம்.

மிண்டும் பழந்தமிழரின் மெய்யியல் வாழ்கையை பின்பற்றி வந்தால் அறிவையும், மனதையும், உடலையும் செழுமைபடுத்தி இவ்வையுலகம் வியக்கும் வகையில் வாழ்வோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.