மண்டைய மண்டைய ஆட்டுன கூறுகெட்ட குக்கர்ஸ் கதை…

புதுப்புது டிரஸ்சா போட்டுத்தள்ற ஒரு மன்னன்..அவன் வீக்னெஸ்சை புரிஞ்சிகிட்டு ரெண்டு தில்லாலங்கடிங்க வந்தாங்க..

மன்னா நாங்க உலகத்துல்லேயே செமையா துணி நெய்ஞ்சி சூப்பரா டிரெஸ் தைப்போம்னு அளந்தானுங்க.. மன்னனும் மெர்சலாயிபோயி பொன்னும் பொருளும் வாரிக்குடுத்து, போய் தறியை போடுங்கடான்னு சொன்னான்..

எல்லாம் சரி மன்னா…சிக்கல் ஒன்னு இருக்கு..நாங்க நெய்யற துணிக்கு ஒரு முக்கியமான பவர் உண்டு.. நல்லவங்க கண்ணுக்கு மட்டுமே தெரியும்.. முட்டாளுக்கு தெரியவே தெரியாதுன்னு போற போக்குல லைட்டாஒரு பிட்டைவேற போட்டுட்டு பூட்டானுங்க.

கொஞ்ச நாள் ஆனதும் மன்னனுக்கு தறி பக்கம் போலாம்னு ஆர்வம். ஆனா பாக்கபோய் துணி தெரியாம போச்சுன்னா நாம முட்டாளுன்னு முடிவாயிடுமேன்னு பயம் வந்துடிச்சி..அதனால சீனியர் மந்திரியை நைசா தறி பக்கம்போய் பார்த்துட்டு வாங்கன்னு அனுப்பி வெச்சான்..

மன்னன் தன்னை எதுக்கு அனுப்புறான்னு மந்திரிக்கு நல்லாவே தெரியும். தறியாண்டா போனப்ப, வெத்து தறியை இரண்டு பயலும் அவ்ளோ லாவகமா ஓட்டிக்கிட்டு இருந்தானுங்க. மந்திரி உத்து உத்து பாத்தும் ஒரு மணணும் தறியில தெரியலை..

நமக்கெதுக்கடா வம்புன்னு கப்ன்னு பிளேட்டை அப்ப டியே திருப்பி போட்டாரு.. அடேங்கப்பா என்னமா டிசைன்ல நெய்யறீங்க..அசத்திறீங்களேன்னு. டாப் கியர்ல போய்கிட்டே இருந்தாரு..

நம்ம துணி, மந்திரி கண்ணுக்கு தெரியுன்னா அவரு எவ்ளோ நல்லவருன்னு தறிபார்ட் ரெண்டும் இன்னும் ஏத்திவிட்டுதுங்க..இதுபத்தாதுன்னு, இன்னும் தங்கம் வைடூரியம் குடுத்தா டிசைன்ல மேலும் அசத்தலாம்னு சொன்னானுங்க..

மந்திரியும் அப்படியே போய் மன்னன்கிட்ட சொல்ல, தறி பார்ட்டிகளுக்கு இன்னும் பொக்கிஷம் வந்து சேர்ந்துச்சி..

மந்திரிக்கு அடுத்து ஒவ்வொரு விஐபியையா தறி பக்கம் அனுப்பி வெச்சான் மன்னன்..அவுங்களும் போய் வந்து ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ள, மன்னனும் பொன்னும் பொருளையும தறிகோஷ்டிக்கு வாரி இறைச்சிகிட்டே இருந்தான்..

தறியில மன்னனுக்காக அற்புதமான துணி உண்மை யிலேயே உருவாயிகிட்டு வர்றதா நாடே நம்ப ஆரம்பிச்சிடிச்சி..

கடைசியில மன்னனுக்கு புது துணி அணிவிக்கும் படலம் வந்திடிச்சி.. ஒவ்வொன்னா கழ்ட்டிட்டு பிறந்த மேனியா மன்னன் நின்னாரு..

தறிபார்ட்டிங்க, கச்சிதமா தைச்ச துணின்னு சொல்லி மன்னனை இப்படியும் அப்படியுமா திருப்பி திருப்பி உண்மையிலேயே துணி மாட்டிவிடற மாதிரியே நடிச்சானுங்க..இதைவிட அபாரம் புது டிரெஸ்ல இருக்கிற மாதிரியே மன்னனும் சீன் போட்டதுதான்.

புதுட்ரெஸ்ஸோட மன்னனை ஊர்வலமா கூட்டிக்கிட்டே போனங்க..வழி நெடுக பார்த்த அம்புட்டு பேரும், மன்னன் டிரெஸ்சை இஷ்டத்துக்கும் புகழ்ந்து தள்னாங்க..

அப்போ ஒரு குழந்தை மட்டும் ஐயே..ஷேம் ஷேம் அந்த ஆள் ஒன்னுமே போட்டுக்காம போறாருன்னு சொல்லிச்சி.. அதுக்கப்புறம்தான் எல்லாருக்கும் உரைச்சுது… மன்னன் அம்மணமா போறார்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

இன்விசிபிள் குளோத்ஸ்ன்ற டென்மார்க் கதை இது..

கதையோட முக்கிய அம்சமே, தறிக்கூடம் போய் வந்து ஆளாளுக்கு அளந்துவிடுவானுங்க பாருங்க..அதுதான்.. இப்படித்தான் நம்ம ஊர்ல தலைவர்களுடைய நிலமையுமிருக்கு.