கூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்

உலகில் அதிகமானோர் எதைப்பற்றியும் அறிந்து கொள்ளவேண்டுமென்றால் கூகிள்  சர்ச்சைதான் (GOOGLE SEARCH ) நாடுகிறார்கள். கூகிள்  சர்ச் தான் (GOOGLE SEARCH ) தேடல் இயந்திரங்களில் முதன்மையாகவும் இருக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இதை உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமானது.

கூகிள் பயன்படுத்தத் தெரிந்த பலரும் பயன்படுத்தாத ட்ரிக்ஸ் சில உள்ளன. சாதாரணமாக ஒரு வார்த்தையை அல்லது சில வார்த்தைகளை உள்ளிட்டுதான் கூகிள் சர்ச்சில் தேடுவார்கள். உதாரணமாக, tamilan.club என கொடுத்து கூகிளில் தேடினால் “TAMILAN CLUB” இணையதளம் காட்டும். அதுபோல சில ட்ரிக் பயன்படுத்தி, தேவையான தகவல்களை நேரடியாக தேடிபெறலாம். அவற்றை பற்றித் தெரிந்துகொள்வோம்.

காலநிலை மற்றும் சினிமா கண்டுபிடிக்க

கூகிளில் உங்கள் ஏரியாவில் என்ன சீதோஷ்ண நிலை, என்னென்ன சினிமா படங்கள் ஓடுகிறது என்பதை தெரிந்துகொள்ள, ஏரியோ பெயர் அல்லது ஏரியா கோட் (pincode), ஜிப்கோட் கொடுத்து என்டர் தட்டினால், அதற்குரிய ரிசல்ட் கிடைக்கும்.

உதாரணமாக Movies Chennai அல்லது Movies 600008 என கொடுத்தால், இவ்வாறு இணைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

வார்த்தைக்கு விளக்கம் தெரிந்துகொள்ள

ஒரு வார்த்தைக்கு விளக்கம் தெரிந்துகொள்ள Define என்ற வார்த்தையை உள்ளிட்டு, விளக்கம் பெற வேண்டிய வார்த்தை டைப் செய்து என்டர் கொடுத்தால், அதற்கான விளக்கம் கிடைக்கும்.
உதாரணம்: define computer

லோக்கல் சர்ச்

அருகாமையில் உள்ள இடத்தை சர்ச் செய்ய இது பயன்படுகிறது. உதாரணமாக Local Search கிளிக் செய்து restaurant கொடுத்து தேடினால், அருகில் இருக்கும் ரெஸ்ட்ராண்ட் எது என காட்டும்.

போன் நம்பர் விபரம் தெரிந்துகொள்ள

ஏரியோ கோட் உடன் போன் நம்பரை உள்ளிட்டால், அந்த போன் எண்ணுக்குரிய அட்ரஸ் போன்ற விபரங்களை பெறலாம்.

ஏர்லைன் டிக்கெட்ஸ் & பேக்கேஜஸ் டிராக் செய்ய

ஏர்லைன் மற்றும் ப்ளைட் நம்பர் கொடுத்தால், அது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, air india.

டிரான்ஸ்லேட் வசதி

டெக்ஸ் அல்லது ஒரு புல் வெப்சைட்டை வேண்டிய மொழியில் டிரான்ஸ்லேட் செய்ய பயன்படுகிறது.

பி.டி.எப். பைல்களை மட்டும் தேட

குறிப்பிட்ட சப்ஜெக்டில் உள்ள PDF பைல்களை மட்டும் தேட உதவுகிறது. Computer File Type:PDF என கொடுத்தால் போதும். கம்ப்யூட்டர் பற்றிய பி.டி.எப். பைல்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கும்.

கால்குலேட்டர்

கூகிள் சர்ச் கால்குலேட்டராகவும் செயல்படுகிறது. கூகிள் சர்ச் பாக்சில் 1+10= என கொடுத்து என்டர் கொடுக்க, அதற்கான விடையை காட்டும்.

Tagged: Google Search Engine, Google Tips, Google Tricks, Internet, Technical tips,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP