கீழடி அகழாய்வில் இரும்புக்காலம் தொடங்கி வரலாற்று காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

இதுவரை 5,300க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவைகள் 2,300 ஆண்டுகள் முந்திய (கி.மு 200 – கி.மு 300) காலத்தை சர்ந்தவைகள் என கணிக்கப்பட்டுள்ளது.

 • 102 அகழிகள், 
 • 71 தமிழி எழுத்துக்கள்,
 • தாழிகள், 
 • மண்பாண்டங்கள்,
 • அணிகலன்கள் (சூது பவளமணிகள், அகேட் மணிகள், முத்து மணிகள், பல வண்ண கண்ணாடி மணிகள்) 
 • சுடுமண்ணால் ஆன முத்திரைகள், 
 • யானை தந்தத்தினாலான தாயக்கட்டைகள், 
 • சதுரங்க காய்கள்,
 • எலும்புக் கருவிகள், 
 • சுடுமண் உருவங்கள், 
 • எழுத்தாணி, 
 • ஈட்டி முனைகள், 
 • கழிவுநீர் குழாய்கள், 
 • வட்டவடிவ உறைகிணறுகள், 
 • சேழர், பாண்டியர் கால நாணையங்கள் 
 • ரோமானிய ரசக்கலவையால் செய்யப்பட்ட மண் பத்திரங்களும் கிடைத்துள்ளது.

 

இப்பகுதி மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வணிகம்  செய்துள்ளதற்கான ஆதாரமகா விளங்குகிறது.

மேலும் மண்பானை ஒடுகளில் ஆதன், உதிரன், திசன், போன்ற தனிநபர் தமிழ் பெயர்கள் உள்ளது இப்பகுதி மக்களுக்கு அப்போதே எழுத்தறிவு இருந்துள்ளதற்க்கான சான்றுகள் இவை.

மேலும் இப்பகுதியில் தொழிற்சாலை நிகழ்த்திருக்களாம் எனவும் அறிப்படுகிறது.

இவைகள் 110 ஏக்கர் பரப்பளவில் அரை ஏக்கரில் நடத்திய ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டவை மீதமுள்ள பகுதிகளிளும் ஆய்வு நடத்தப்பட்டால் இன்னும் பல வியப்பூட்டும் விடையங்கள் கிடைக்கும்.

இதுவரை நடத்திய ஆய்வில் மதம் தொடர்பான அடையாளம் கிடைக்கப்படவில்லை காரணம் இந்த நதிக்கரை நாகரிகம் மதங்கள் தோன்றுவத்ற்க்கு முன்பே தழைத்தோங்கியிருந்த மதமற்ற  சமூகமாக இருந்துள்ளது

 

இது தமிழர் நாகரிகத்திற்க்கு கிடைத்துள்ள முக்கிய அடையாள சான்றாக விளங்குகிறது.