கீழடி நசுக்கப்படும் தமிழர் வரலாறு | keezhadi – 2,200 years Old Ancient City
மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடைநிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பியதில் அது 2200 ஆண்டுகளுக்கும் முந்தியது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெறும் 50 செண்ட் அளவில் தோண்டிப் பார்த்ததில் வெளிப்பட்ட பழந்தமிழரின் வைகைக்கரையில் வாழ்ந்த மனிதரின் நாகரிகம், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து புரட்டி எழுத வேண்டிய காலம் வந்துள்ளது..