காந்தியின் தேசத்தில்….???

#சாக்கடை_சுத்தம் செய்யவும் கருவி இல்லை….

#குப்பை_அள்ளவும் கருவி இல்லை….

#மலம்_அள்ளவும் கருவி இல்லை….

#ஆழ்துளைக்_கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கவும் கருவி இல்லை…

ஆனால்
#உயிர்களை_கொன்று_குவிக்கும் இராணுவ கருவிகள் மட்டும் பல ஆயிரம் கோடிகளில் உள்ளது காந்தியின் தேசத்தில்….

விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவது ஒருபுறம் இருக்க இன்னொரு வழியில்
#பேருந்து_ஓட்டை_வழியாக குழந்தைகள் கீழே விழுகிறது….

பல ஆயிரம் அடிகளுக்கு கீழே உள்ள மீத்தேனை உறிஞ்சி எடுக்க தொழில்நுட்பங்கள் இருக்கும் நாட்டில் சில_அடிகள் ஆழத்தில் இருக்கும் குழந்தையை மீட்க கருவிகள் இல்லையாம்…

கடலில்_தத்தளிக்கும் மீனவர்களை மீட்கவும் கருவிகள் இல்லை, குரங்கணி போன்ற தீ விபத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கவும் கருவிகள் இல்லை, கடலில் கொட்டிய எண்ணெயை அள்ள கக்கூஸ்_வாளியை தவிர வேறு கருவியும் இல்லை….

#அப்புறம் என்னதான்டா இருக்கும் என்று பார்த்தால் #பாகிஸ்தான் மீது வெறுப்பை_வரவைக்கும்
தேசப்பற்று என்ற கொடூரமான கருவி மட்டும் நாடு முழுக்க பரவி கிடக்கிறது…..காந்தியின் தேசத்தில்….!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP